முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்துக்கு மாற்றம்..?

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      விளையாட்டு
world-cup 2023-06-05

Source: provided

துபாய் : 2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.சி.சி. ஆலோசனை...

இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 ஐ வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கிரிக்கெட்டுக்கு தேவையான உள்கட்டமைப்பு இல்லாததால் இது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

உள்கட்டமைப்பு...

குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரை அங்குள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே, உள்கட்டமைப்பை மிக குறுகிய காலத்திற்குள் மேம்படுத்துவது சிரமமாக இருப்பதால் 2024 டி20 உலகக்கோப்பையை அங்கிருந்து மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்கட்டமைப்பு மிக மோசமாக இருக்கும் சூழலில் 2024 மற்றும் 2030 டி20 உலகக்கோப்பை தொடர்களை நடத்தும் நாடுகளை மாற்றியமைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக... 

இதன்படி 2030இல் டி20 உலகக்கோப்பையை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தில் 2024 உலகக்கோப்பை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின்படி 2030இல் இங்கிலாந்தில் நடக்க உள்ள தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா கூட்டாக நடத்தும். இதன்படி நீண்ட காலம் கிடைக்கும் என்பதால் அமெரிக்காவில் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தி விடலாம். இதுகுறித்து தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் இல்லை என்றாலும், வரவிருக்கும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என ஐசிசிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து