முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு இயல்பான மழை அளவு இருக்கும்: கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

திருவனந்தபுரம்: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு இயல்பான மழையளவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் பருவமழை ஒரு வார காலம் தாமதமாகத் தொடங்கியுள்ளது. தாமதமாக மழை தொடங்கினாலும் இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி வழக்கம்போல் தொடங்கிவிட்டது. மழையானது படிப்படியாக நகர்ந்து காற்று திசை வேகத்தின்படி கேரளத்தில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியுள்ளது. 

தற்போது மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதற்கு அறிகுறியாகும். இந்நிலையில், கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும் எனவும், தென் மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து