முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கிழக்கு அரபிக்கடலில் 'பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
Fisher-man 2023-06-08

Source: provided

புதுடெல்லி: ‘பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது என்றும், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் திங்கள்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்தப் புயல் புதன்கிழமை மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியது. 

இந்த நிலையில் அப்புயல் வியாழக்கிழமை அதிதீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிப்பர்ஜாய் காலை 05:30 மணி அளவில் கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 910 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக அதிதீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும். இதனால் புயல் பாதிப்பு இருக்கும் அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து