முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியினர் சோர்வாகவும், மனமுடைந்தும் காணப்பட்டனர் முன்னாள் வீரர் கவாஸ்கர் பேட்டி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      விளையாட்டு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளின் இறுதியில் இந்தியா சோர்வாகவும், மனமுடைந்தும் காணப்பட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியா பந்துவீச்சு...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா சோர்வாக.... 

இந்நிலையில் போட்டி குறித்து தனியார் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பின்வருமாறு கூறினார். முதல் நாளின் இறுதி செஷ்சனில் இந்தியா சோர்வாக காணப்பட்டது. இந்திய அணியினர் மனமுடைந்து காணப்பட்டனர். டிராவிஸ் ஹெட் 146 மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியினர் 550-600 ரன்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் நொறுக்கிய முதல் வீரர் என்ற வரலாற்று பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து