முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை: மிக எளிமையாக நடந்த மத்திய நிதி அமைச்சர் இல்ல திருமணம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Nirmala 2023 06 09

பெங்களூரு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார்.

நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமயிக்கும், பிரதீக் என்ற இளைஞருக்கும் பெங்களூருவில் நேற்று முன்தினம் (ஜூன் 8) திருமணம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனின் வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் பங்கேற்பு இல்லாமல் எளிய முறையில் தனது மகளின் திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி உள்ளார்.

பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா அதமரு மடத்தின் தலைவர் விஸ்வபிரிய தீர்த்த ஸ்ரீபாத-வின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது இளஞ்சிவப்பு நிற புடவையை மணமகள் அணிந்திருந்தார். மணமகன் பஞ்சகச்சம் அணிந்திருந்தார். மணமகளின் தாயாரான நிர்மலா சீதாராமன் நீல நிற மொலகல்முரு புடவையை அணிந்திருந்தார். 

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தொழில்முறை பத்திரிகையாளரான பரகலா வங்கமயி, மிண்ட் பத்திரிகையில் தற்போது பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் முடித்துள்ள அவர், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து