முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2,000 நோட்டுகள் தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

வருகிற செப்டம்பர் 30-ம் தேதி முன் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறவுள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினிகுமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட், ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையும் இல்லை. மேலும் கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, ரிட் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 29-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மேலும் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்றுவது தொடர்பான மேல்முறையீடு வழக்கை அவரசமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பின் ஜூலை 3-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து