முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் துவங்கியது பருவமழை: திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
rain 2023-05-25

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று முன்தினம் தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை நேற்று முன்தினம் முதலே மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோல கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு வரையிலான கடல்பகுதியில் கடல் சீற்றம் காணப்படும் என்றும், அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து