முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்றைய போட்டியில் தீக்சனா இல்லை

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2023      விளையாட்டு
Mahesh-Diksana 2023-09-16

Source: provided

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் அவருக்கு காயம் உள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேஷ் தீக்சனா இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தீக்சனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________

கோப்பை மிகவும் முக்கியம்: ஷுப்மன் கில்

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், நாங்கள் வெற்றி பெறும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். 

தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்பது அவசியம். இந்த சூழலில் நாங்கள் ஓரிரு போட்டிகளில் தோல்வியடைந்தால் அது எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடியதாகவே உணர்கிறோம். நாங்கள் 10-15 ரன்கள் அதிகமாக அவர்களை எடுக்க விட்டுவிட்டோம். மற்றபடி, நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

______________

புதிய தொழிலை தொடங்கும் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமானவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சவுரவ் கங்குலி தொழில் தொடங்கும் முனைப்பில் உள்ளார். அவர் மேற்குவங்காளத்தின் மெதினிபூரில் விரைவில் இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார். மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் மற்றும் துபாய்க்கு சென்றுள்ளார். அரசு முறை பயணமாக மம்தா பானர்ஜியும் அரசின் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர். அதேவேளை மம்தா பானர்ஜியுடன் சவுரவ் கங்குலியும் சென்றுள்ளார். மேற்குவங்காளத்தில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின், துபாயில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த வங்காள-உலக தொழில் கூட்டத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி கூறுகையில், நாங்கள் மேற்குவங்காளத்தில் 3வது இரும்பு தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் கிரிக்கெட் மட்டும் தான் விளையாடுவேன் என பலர் நினைக்கின்றனர். நாங்கள் 2007ம் ஆண்டே சிறிய அளவில் இரும்பு தொழிற்சாலை தொடங்கிவிட்டோம். இன்னும் 6 மாதத்திற்குள் நாங்கள் மெதினிபூரில் புதிய இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளோம்' என்றார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து