முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி யஷோபூமி, புது ரெயில் நிலையம் திறப்பு : விஸ்வகர்மா திட்டமும் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-09-17

Source: provided

புதுடெல்லி : தனது பிறந்த நாளையொட்டி நேற்று பிரதமர் மோடி, யஷோ பூமி, புது ரயில் நிலையம் மற்றும் விஸ்வகர்மா திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். 

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். முதலில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து சென்று யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரயில் நிலையம் எனும் செக்டார் 21 மெட்ரோ ரயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்தார். 

அதற்கு பிறகு, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்ட யஷோபூமி என பெயரிடப்பட்டிருக்கும் உலகிலேயே மிக பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தையும் திறந்து வைத்தார். 

மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையம் 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு பிறகு விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும், சின்னத்தையும், இணைய முகப்பையும் டேக்லைனுடன் துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்கள் குறித்து உங்களுக்கு பயிற்சி தேவை. அதனை அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கும். இப்பயிற்சியின் போது ரூ. 500 வழங்கப்படுவதுடன் உபகரணங்களுக்கான தொகையாக ரூ. 1500 உங்களுக்கு வழங்கப்படும். 

உங்கள் பொருட்களை பெயரிடுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் அரசு உங்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் உபகரணங்களை ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறினார். 

ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி இதில் சேரும் கலைஞர்களுக்கு அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு உதவி, உபகரண ஊக்கத்தொகையாக ரூ. 15,000, பிணையில்லா கடனாக முதற் பகுதியாக ரூ. ஒரு லட்சமும் பின்னர் ரூ. 2 லட்சம் ஆகியவற்றுடன் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட உதவியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வகையான கலை மற்றும் கைவினை தொழில்கள் இடம்பெறும். 

முன்னதாக பிரதமர் மோடி இந்த புது ரயில் நிலைய சேவையை தொடங்கி வைக்க டெல்லி தவுலா குவான் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்தார். அதில் பயணிகளுடன் அவர் உரையாடினார். அவர் உடன் பயணம் செய்யப் போவதை எதிர்பாராத பயணிகள் ஆச்சரியத்தில் மிகவும் மகிழ்ந்தனர். அப்போது அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து