முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறவை மாடுகளுக்கு காப்பீடு: ஆவின் நிறுவனம் திட்டம்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Aavin logo

Source: provided

சென்னை : கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக்கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், பசு, எருமை, ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகின்றன. 

இந்நிலையில், கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. காப்பீடு கட்டணமாக, ரூ. 600 முதல் ரூ. 700 வரை வசூல் செய்யப்படும். இதில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 

மானியத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நடப்பாண்டு, 50 சதவீத கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,

இது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஆவின் பால் முகவர்களுக்கும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வங்கிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் உள்ள பால் முகவர்களை அழைத்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து