முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      சினிமா
Meera 2023-09-19

சென்னை, இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் பிளஸ் 2 பயின்று வந்தார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 

 இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காலை மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மீராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மீரா உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து