முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ம்  தேதியுடன் முடிவடைந்தது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. 

இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. 

புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார்.  

அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேசன் கடைகளை திறக்கவில்லை. அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்று காலை புதுவை சட்டமன்றம் கூடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து