முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை: அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      தமிழகம்
Uthaneethi 2023-09-19

Source: provided

மேலூர் : புதிய பாராளுமன்றத்திற்கு  நடிகைகளை அழைத்தனர், ஜனாதிபதியை அழைக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்?

மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரெளபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. புதிய பாராளுமன்ற விழாவில் ஜனாதிபதியை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதல்வர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து