முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      சினிமா
Ganguwa 2024-11-08

Source: provided

சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் புரமோசன் பணிகளில் 'கங்குவா' படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பதற்காக வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, பாக்கி தொகையை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது ரிலையன்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், 'ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் ரூ.18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட எதிர்ப்பு இல்லை' என்றார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து