முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து தோழர்களும் எழுச்சியுடன் ஒன்று சேர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்துவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது.

அதற்குள் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம். தி.மு.க. அரசு மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து