முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தாவுக்கு கனிமொழி அழைப்பு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      தமிழகம்
Kanimozhi

சென்னை, சென்னை நந்தனத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கு கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். 

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. 

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரம் மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார். இதையொட்டி அக்டோபர் 14-ம் தேதி பிரம்மாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ம் தேதி மாலையில் நடைபெறுகிறது. இந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள். 

இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்கமளிக்க உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து