முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் மிதக்கும் நாக்பூர்: குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Nagpur 2023-09-23

Source: provided

நாக்பூர் : நாக்பூரில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள். 

மகராஷ்டிராவில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் நாக்பூர் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் கொட்டிய இந்த மழையால் நாக்பூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. 

அந்த நகரில் உள்ள அம்பஜாரி ஏரி நிரம்பியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். 

நாக்பூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். 

அவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். நாக்பூர் விமான நிலைய பகுதியில் நேற்று காலை 5.30 மணி வரை 10.6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மகராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, 

நாக்பூர் நகரில் மழை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஜாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

சில இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க பல குழுக்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்தார். 

நாக்பூரில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடக்கிறது. இதற்கிடையே நாக்பூர் பண்டாரா, கோண்டியா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து