முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Ganesha-statue 2023-09-15

Source: provided

சென்னை : சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.  

 தமிழகம் முழுவதும் கடந்த 18-ம்  தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த நிலையில் 23-ம்  தேதி மற்றும் 24-ம்  தேதி சிலை கரைப்புக்கு போலீசார் அனுமதி வழங்கினர். 

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரண்டாவது நாளாக நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. 

பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன்கள், டிராலிகள் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகளை கரைக்கும் போது எவ்வித அசாம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்திய கடற்படை சார்பில் ரோந்து கப்பல் மற்றும் டிரோன்கள் மூலமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விநாயகர் சிலைகளை கரைப்பதை முன்னிட்டு சென்னையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து