முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் பிரச்சனைகளை தீர்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் முத்துசாமி பேட்டி

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

ஈரோடு : டாஸ்மாக் பிரச்சனைகளை தீர்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

ஈரோட்டில் நேற்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 111 கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டம் முழுவதும் 3000 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது. 

இது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு வீடுகளில் கிடைக்காத சூழல் உள்ளது. 

ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என பொதுவாக கருத்து சொல்வதுண்டு. எனினும் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன 

இந்த துறையின் சார்பாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். 

பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தனிக்குழு அமைத்து இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன அதை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையாக அதை பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து