முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து விபத்து: யூடியூபர் வாசனின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
TDF Vasan 2023-09-26

காஞ்சிபுரம், மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் வாசனின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

 பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். 

இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து