Idhayam Matrimony

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அக்.17 முதல் இடமாற்றம் செய்ய தடை : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அக்டோபர் 17-ம் தேதி முதல் இடமாற்றம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கியுள்ளது. இதையொட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பணி நடைபெறவுள்ளது. 

இதனால், வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை ஜனவரி 1-ம் தேதி வரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  மேலும், காலியாக உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து