முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆமதாபாத்தில் ரோபோ கண்காட்சி: பிரதமர் மோடி பார்வையிட்டார்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-09-27

Source: provided

ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். 

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி நேற்று சென்று அங்கு அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்வர்  பூபேந்திர பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில், தொழில் கூட்டமைப்புகள், வர்த்தக பிரிவை சேர்ந்த பிரபல நபர்கள், இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டையும் தொடக்கி வைத்தார்.  

மேலும் குஜராத்தில், 22 மாவட்டங்களில் கிராமப்புற வைபை வசதிகள் உள்பட ரூ. 5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அவர் சோட்டா உதேப்பூரில் தொடங்கி வைத்தார். இந்த வைபை வசதிகளால் 7,500 கிராமங்களை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடைவார்கள். இதே போன்று, திறன் திட்டங்களுக்கான பள்ளிகள் இயக்கத்தின் கீழ், ரூ.4,505 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து