முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் : டெல்லியில் நாளை நடக்கிறது

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Cauvery 2023 08 11

Source: provided

புதுடெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.  ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என்றும் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் நாளை (29-ம் தேதி) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார். 

நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள். மேலும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து