Idhayam Matrimony

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Thiruvannamalai

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி இன்று  (வியாழக்கிழமை) மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29-ம்  தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. 

 

எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து