முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை:இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் (98). வயது முதிர்வால் சென்னையில் நேற்று காலமானார். 

அவரது மறைவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார் என்று தெரிவித்துள்ளார். 

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவருடன் நான் கழித்த தருணங்களை நான் எப்போதும் ரசிப்பேன். சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்; பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர். 

எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் உலக அறிவியல் சமூகத்துடனும் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து