Idhayam Matrimony

டெங்கு பரவல்: சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : டெங்கு பரவலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை அரசு நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

மேலும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் டைபாய்டு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இனிமேலாவது தி.மு.க. அரசு அப்பாவி மக்களின் உயிரைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.  

மேலும் கடந்த 2 மாதங்களில் எத்தனை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்ற விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து