Idhayam Matrimony

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் பகல் 11.20 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு  வயது 98. அவருக்கு சௌமியா, மதுரா, நித்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதி சடங்கு இன்று (சனிக்கிழமை) அரசு மரியாதையுடன் நடக்கிறது.

எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரும் எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து