முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் டெல்லியில் கைது

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
Jail

Source: provided

புதுடெல்லி : ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஷாபி உஸ்ஸாமா என்கிற ஷானவாஸை டெல்லியில் தனது மறைவிடத்தில் பதுங்கி இருந்த போது, டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். பொறியியலாளராக இருந்து வந்த ஷானவாஸ் புனே ஐ.எஸ்.ஐ.எஸ். வழக்கில் தேடப்பட்டு வந்தார்.  டெல்லியை சேர்ந்தவரான இவர் புனேவுக்கு சென்றார். கடந்த ஜூலை மாதம் புனேவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி வந்து டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார். 

ஷானவாஸ் தலைக்கு என்.ஐ.ஏ. ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பயங்கரவாதிகளையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து வெடி தயாரிக்ககூடிய திரவம் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து