முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும் : வானதி சீனிவாசன் பேட்டி

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
Vanathi 2023 06 13

Source: provided

கோவை : மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து தான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதாவில் காங்கிரஸ் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி. 

பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக் கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். 

நம் நாட்டில் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து