Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக புடின் விமர்சகர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      உலகம்
Russia 2023-11-21

மாஸ்கோ, ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக ரஷ்ய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், அதிபர் புடினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் அறிவித்துள்ளார். 

ரஷ்யாவில், 2024 மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. பதவியில் இருந்த ஒருவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ரஷ்ய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிமுறையில் 2020-ல் தற்போதைய அதிபர் புடின் மாற்றம் கொண்டு வந்தார். தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி அதிபர் புடின் மீண்டும் போட்டியிட 2036 வரை தடையேதும் இல்லை. 

இந்நிலையில் ரஷ்ய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், புடினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் (52) அதிபர் தேர்தலில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கிர்கின் மீது புடின் அரசு, பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சிறையில் அடைத்துள்ளது.

டெலிகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ட்ரெல்கோவ் எனும் பெயரில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கிர்கின் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சீட்டாட்டத்தில் ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஒருவருடன் சீட்டு விளையாடுவதை போன்றது. ஆனால், நம் நாட்டின் மீது பற்றுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வரும் தேர்தலில் ஒரே மனிதரே மீண்டும் மீண்டும் தேர்தலில் எதிர்ப்பின்றி வெல்வதற்கான திட்டங்களை தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன். 

நாட்டின் முன் நிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களிலிருந்து தேசத்தை இதன் மூலம் காக்கவும் முடியும். என் ஆதரவாளர்கள் என்னை முன்னிறுத்த பிரசாரத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு கிர்கின் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து