முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால்.... பிரதமர் நரேந்திர மோடி முக்கிய வாக்குறுதி

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      அரசியல்
mODI 2023-05-25

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், ராஜஸ்தானுக்கு தேவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசு. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை என்றும் அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "பாராளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக கண்டிக்கத்தக்க கருத்துகளைக் கூறி வருகின்றனர். சமீபத்தில் சனாதனம் குறித்து காங்கிரசும், இன்டியா கூட்டணியும் கூறியது மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரசுக்கு வாரிசு அரசியலை தவிர வேறு எதுவும் தெரியாது.

நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரசின் உண்மை முகம் இதுதான். மொத்த நாடே வளர்ச்சியை நோக்கி இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை எட்டும்போது ராஜஸ்தான் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கு ராஜஸ்தானுக்கு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. 

ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத்தில் பா.ஜ., ஆட்சியில் உள்ளது. அங்கு பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, பெட்ரோலுக்கு கூடுதலாக ரூ.12 வாங்குகிறது. இன்று நான் ராஜஸ்தானுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். இங்கு பாஜ., ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து