முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்: ஹமாஸ் தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      உலகம்
Hamas-Ismail 2023-11-22

டெல் அவிவ், இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் பலியானார்கள். அதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளை பிடித்துச் சென்றனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. 

இடைவிடாமல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தற்போது வரை தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால் வடக்கு காசாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்க முடியாத பரிதாப நிலை உள்ளது.

இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்தது. பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர் என குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது.

இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தததை நெருங்கி விட்டார்கள். அதிகாரிகள் தங்களது பதிலை கத்தார் மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து