முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை: பாடலை பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      சினிமா      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, இசை பல்கலைக் கழகம் சார்பில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்ற பாடலை பாடி அசத்தினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

இசைப் பல்கலைக் கழகம் சார்பில் பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் என 2 இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது. 

பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவரது பாடல்களை நான் எப்போதும் வெளியூருக்கு காரில் செல்லும் போது காரில் போட்டு கேட்டுக் கொண்டே செல்வேன். 

எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. அதை அடிக்கடி நான் பாடியும் இருக்கிறேன். நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை. காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை. உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை. 

அதனால்தான் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்த உடனே வணக்கம் சொல்லி விட்டு நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக டாக்டர் பட்டம் வாங்க மேடைக்கு வந்த பி.சுசீலா முதல்வர்  மு.க.ஸ்டாலினின் கையை பிடிக்க முயன்ற போது தடுமாறி இருக்கையில் அமர்ந்தார். அருகில் இருந்த அமைச்சர்கள் அவரை தாங்கி பிடித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து