முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கிரிவலம்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      ஆன்மிகம்
Thiruvannamalai

தி.மலை, திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. அதன்படி உண்ணாமலைஅம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வந்து அருள் பாலிப்பது வழக்கம்.  கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். 

தை மாதம் மாட்டு பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் திருவூடலின்போது, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலை அம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று விடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.

கார்த்திகை தீப திருவிழா முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின் போது, 2-ம் நாள் கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத்தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார்.

அதன்படி இன்று அண்ணாமலையார் கிரிவலம் நடக்கிறது. உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர். மேலும் கிரிவல பாதை முழுவதிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து