முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால கூட்டத்தொடருக்கு தயாராகிறது பாராளுமன்றம்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு பாராளுமன்ற இரு சபைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக டிசம்பர் 2ல் அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் போதெல்லாம் அந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும். லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலும் உள்ள கட்சிகளின் சபை தலைவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்பர்.

இந்நிலையில், டிசம்பர்  4-ம் தேதி, குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ளது. இந்த ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் என்பதோடு மட்டுமல்லாது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு கூட்டத்தொடரும் இதுதான். அடுத்த மாதம் 22 வரை நடக்கப்போகும் இந்த கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் பாராளுமன்றத்தில் துவங்கியுள்ளன. இதன்படி அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பை அனைத்து கட்சி சபை தலைவர்களுக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷி, அனுப்பியுள்ளார். வழக்கமாக கூட்டத்தொடர் துவங்குவதற்கு முந்தைய நாள்தான், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால், இந்த முறை ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் டிசம்பர்  3-ல் வெளியாகவுள்ளன. இதனால் ஒருநாள் முன்கூட்டியே, 2ம் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து