முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      உலகம்
Marianna-2023-11-29

கீவ், உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக  நீடித்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ மனைவி மரியானா. இந்த நிலையில் மரியானாவுக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு உணவு மூலம் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார். ரஷ்யாவை தாக்கும் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து