முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் : ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 47,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று (நவ.30) இதுவரை இல்லாத அளவில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. போர்ச்சூழல், வட இந்தியாவில் தொடங்கி இருக்கும் திருமண சீசன் போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனையானது. இதன்மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.50,720-க்கு விற்பனையானது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.82.20-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.82,200 ஆக இருந்தது. தங்கம் விலை உயர்வால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்து வருவதாகவும், தங்கம் விலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து உயரும் என்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தங்கம் விலை எதிர்வரும் நாட்களிலும் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து