முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதி வாங்கியே பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது : ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டிகள் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கார் பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டு கோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், 'கார் பந்தயத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான இடத்தில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும். பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (நவ.,29) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது. இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும்' என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து