முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

சென்னை, நீர்வரத்து  அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருதி நேற்று காலை 9 மணியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் எரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 22.35 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. 

உபரி நீர் வடிந்து செல்லும் ஆற்றங்கரையில் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து