முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் மேலும் மழை நீடிக்கும்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட தகவலில், நேற்று முன்தினம் (நவ.28) காலை 8.30 மணியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (நவ.29) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் நிலவுகிறது. 

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (நவ.30ல்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிச.2-ல் புயலாக வலுப்பெறக்கூடும்.  வட இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று(நவ.30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை  29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.  தெற்கு அந்தமான் மற்றம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும். வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து