முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023      இந்தியா      அரசியல்
Telangana election-2023-11-30

ஐதராபாத், தெலங்கானாவில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவில் முதல்வர் சந்திரசேக ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

தெலங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக காலை தொடங்கி நடைபெற்றது. 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் 2,290 வாக்காளா்கள் போட்டியிடுகின்றனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் சிந்தமடகா வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவரது மனைவி ஷோபாவும் அவருடன் வந்து வாக்களித்தார். 

மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அவரது சகோதரி எம்எல்சி கவிதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கியதுமே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். தெலங்கானா முதல்வர் கேசிஆரின் மகளான கவிதா தனது வாக்கைப் பஞ்சாரா மலை தொகுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.  அவர், “தெலங்கானா மக்கள் அனைவரும் முன்வந்து வாக்களைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வாக்குப் பதிவிட்டால்தான் எங்களைக் கேள்வி கேட்க முடியும். வாக்குப் பதிவு செய்தால், அரசியல்வாதிகளை பொறுப்போடு நடக்கச் செய்ய இயலும்” எனத் தெரிவித்தார்.

பாஜகவின் தலைவர் கிஷன் ரெட்டி, வாக்குகளைப் பதிவு செய்யாமல் அரசியல் அமைப்பை விமர்சிக்க உரிமையில்லை. மக்கள் பணம், மது  ஆகியவற்றுக்கு விலை போகாமல் பயமில்லாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து