முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பெயரைப் பயன்படுத்தமாட்டோம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம்

வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023      அரசியல்
OPS 2023-10-25

சென்னை, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தமாட்டோம் என்று ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. 

அ.தி.மு.க. பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து, ஓ.பி.எஸ். தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுவரை இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு இ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 

பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தமாட்டோம் என்று ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்ததையடுத்து, வழக்கினை டிச. 11 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் ஓ.பி.எஸ். தரப்பு அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் என எதையேனும் பயன்படுத்தினால் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரும்படி இ.பி.எஸ். தரப்பினரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து