முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன்: எலான் மஸ்க்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் கூறியுள்ளார். 

எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தான் அவமதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் பகிரங்கமாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து டிரம்பிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது டிரம்புக்கான ஆதரவை குறிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக 2020-ம் ஆண்டில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து இருவருக்கும் இடையே சர்ச்சைக்குரியவகையில் உறவு நீடிப்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து