முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      சினிமா
Subbulakshmi 2023-12-01

Source: provided

திருவனந்தபுரம் : நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையும் இசை கலைஞருமான ஆர்.சுப்புலட்சுமி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.  அவருக்கு வயது 87. அவரது  மறைவு குறித்த தகவலை அவரது பேத்தி சவுபாக்யா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவர் ஆர். சுப்புலட்சுமியின் மகளும், நடிகையுமான தாரா கல்யாணின் மகள் ஆவார்.        

 கேரளாவில் 21 ஏப்ரல் 1936-ம் ஆண்டு பிறந்த ஆர்.சுப்புலட்சுமி,  திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர் பாலபவனில் இசை கலைஞராகவும் நடனப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். பின்னர் 1951-ம் ஆண்டு முதல்  அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் பணியாற்றிய தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையையும்  படைத்தார். 

டப்பிங் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தனது 66-வது வயதில் முதன்முறையாக பிருத்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் ஆர்.சுப்புலட்சுமி திரைத்துறையில் நுழைந்தார். அதன்பிறகு, கல்யாணராமன், ராப்பகல், திலகம், சி.ஐ.டி மூசா, பாண்டிப்படா உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் ஆர்.சுப்புலட்சுமி கவனம் பெற்றிருந்தார். பீஸ்ட் படத்தில் பணயக் கைதியாக நடித்திருந்தார். ஆர்.சுப்புலட்சுமியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து