முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் 2000 இடங்களில் நடைபெறும், அதில் 100 முகாம் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. 

அந்த வகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்று, அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால் முதல்வரின் உத்திரவின்படி இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் 2000 இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும். 

பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த  அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து