முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-12-01

Source: provided

சென்னை : ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழக அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல, அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்திதாசர். 

எழுத்தாளர், ஆய்வாளர்,வரலாற்று ஆசிரியர்,மானுடவியல் சிந்தனையாளர்,பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர்   என்று பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர். அவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமுமே தடை என்று கூறிய அயோத்திதாசர், மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர் என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய 175-வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற விதமாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது.

மகான் புத்தரை இரவு பகலற்ற ஒளி என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதருடைய சிந்தனைகளும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

இந்த நிலையில் அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபத்தை திறந்து வைத்ததையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  

அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமை.  ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்கல். அயோத்திதாசர் அஞ்சல் தலை வெளியீடு. அவர் நடத்திய தமிழன் இதழுக்கு நூற்றாண்டு விழா. அவர் பெயரிலான சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு நிலம் ஆகியவற்றை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சியே. 

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் நமது திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. புத்தரை இரவு பகலற்ற ஒளி எனப் போற்றிய பண்டிதரின் சிந்தனைகளும் அத்தகைய ஒளியாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படட்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து