முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      தமிழகம்      அரசியல்
anbumani 2025-01-03

சென்னை, டாக்டர்  அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு  3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும்-அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தையும் இருவரும் தனித்தனியாக கூட்டியுள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு நடக்கிறது. அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதனால் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'கான்ப்ளுயன்ஸ்' அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழுவிற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300 பேர் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. அந்த 3300 பேருக்கும் டாக்டர் அன்புமணி சார்பில் அழைப்பு அனுப்பப்படுகிறது.

பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், கட்சியில் ஏற்பட்டு உள்ள குழப்பம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து