முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய அதிபர் ட்ரம்ப்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று ட்ரம்ப் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், டிரம்பின் கருத்தை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடே கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவுக்கு பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தை மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார். டெட் ஹேண்ட் என்பது பனிப்போர் காலத்தில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் தானாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து