எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) காலை தொடங்கிவைத்துப் பேசியது: “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், மக்களிடம் ஆலோசனை செய்தேன். தூத்துக்குடி வந்த பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளிக்க ஒப்புதல் வழங்கினேன். உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் நான் கலந்து கொண்டு பேசிய முதல் நிகழ்ச்சி இதுவே.
நான் ஆட்சிக்கு வந்தபோது, கரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது. நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி செயல்பட்டோம். அதேபோல், இன்று (நேற்று) இந்தத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் மீண்டும் அமைச்சர்கள் அனைவரும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி, அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை தொடங்குகின்றனர்.
கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள். இதற்காக நிறைய திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தத் துறையை சிறப்பாக வழிநடத்துகிறார். அதனால்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஐ.நா. சபையே பாராட்டியுள்ளது.
இன்று (நேற்று) தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 1,256 முகாம்கள் நடக்கப்போகின்றன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கக் கூடிய ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாம்களிலும் மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். முகாம் வரும் பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான சோதனை செய்யப்படும். பொது மருத்துவரின் அறிவுரைப்படி இசிஜி, காசநோய், தொழுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்படவிருக்கிறது.
தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம். இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமே, முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மக்களுக்கு தொகுத்து ஒரு கோப்பாக வழங்கப்படும். அந்த அறிக்கையை கொண்டு எதிர்காலத்தில் எந்த மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
நம் அரசின் குறிக்கோள் நகர்ப்புறத்தில் வசதி வாய்ப்புடைய மக்கள் மருத்துவ சேவைகளைப் பெறுவதுபோல், கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகளாக என்றழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள் பயன்பெற அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் ஒருவரின் உயிரைப் பாதுகாக்கப் போகும் திட்டம். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையானதாக திகழ வேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறாக மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நிலையை பாதுகாப்பதிலும் தமிழ்நாடு தான் முதன்மையானதாக திகழும் என்ற நம்பிக்கையோடு, நலமான வாழ்வு பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 6 days ago |
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் : ரசிகர்கள் அதிர்ச்சி
01 Aug 2025லண்டன் : கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கதேச மாடல் அழகி சாந்தாபால் கைது
01 Aug 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது செய்யப்பட்டார்.
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
ரகானே, புஜாராவுக்கு இடமில்லை
01 Aug 2025துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது.
-
லண்டனில் சீக்கிய இளைஞர் கொலை
01 Aug 2025பிரிட்டன் : பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்கள் உள்பட 5 பேர் போலீசார் கைது செய்தனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
இம்ரான்கான் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டு சிறை : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி
01 Aug 2025லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன
-
கிறிஸ் வோக்ஸ் விலகல்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு
01 Aug 2025லண்டன் : கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை மாற்றம்..?
01 Aug 2025லக்னோ : ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத்தில் விளையாடிய அமைச்சரின் 'இலகா' மாற்றம்
01 Aug 2025மகராஷ்டிரா : மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்-ஐ சேர்ந்த வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ சர்ச்சயை ஏ
-
உலக நாடுகளுக்கு 41 சதவீதம் வரை வரி விதிப்பு: உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
01 Aug 2025நியூயார்க் : உலக நாடுகளை விட சிரியாவில் அளவுக்கு அதிகமான வரி விதிப்பு அமெரிக்கா அரசு அறிவித்தள்ளது.
-
தலையில் வெள்ளை பட்டை அணிந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்
01 Aug 2025லண்டன் : 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் தலையில் வெள்ளை பட்டை அணிந்து களமிறங்கினர்.
-
இந்தியாவுக்கு எதிராக கிராவ்லி - டக்கெட் சாதனை
01 Aug 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கிராவ்லி - பென் டக்கெட் ஜோடி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
224 ரன்களுக்கு ஆல் அவுட்...
-
ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
01 Aug 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-08-2025.
02 Aug 2025 -
டிசம்பரில் இந்தியா வருகிறார் : கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி : தோனி - கோலியுடன் விளையாடுகிறார்?
01 Aug 2025மும்பை : ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
02 Aug 2025சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
-
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
02 Aug 2025தேனி, அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
ஆணவப்படுகொலைக்கு உரிய நீதி: சீமான் உறுதி
02 Aug 2025சென்னை : ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு
02 Aug 2025சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்
02 Aug 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி
02 Aug 2025புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
-
தமிழக வாக்காளர்களாக வெளிமாநிலத்தவர் அமைச்சர் துரைமுருகன் கவலை
02 Aug 2025காட்பாடி, லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம