முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.18.85 கோடி கொள்ளை

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

உக்ருல் : மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள்  கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் சுமார் 10 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஆயுதங்களோடு, முகத்தை துணியால் மூடிக்கொண்டு வங்கிக்குள் புகுந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களை தாக்கி உள்ளே நுழைந்த அந்த கும்பல், வங்கி ஊழியர்களை கயிறுகளால் கட்டி, கழிவறைக்குள் வைத்து பூட்டியது. 

வங்கி மேலாளரை மட்டும் துப்பாக்கி முனையில் மிரட்டி, லாக்கரை திறக்கச் செய்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரூ.18.85 கோடியை அவர்கள் கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து